Categories
சினிமா தமிழ் சினிமா

JUSTIN: ‘மாநாடு’ படத்திற்கு மிகப்பெரும் வெற்றி…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு…..!!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்தத் திரைப்படம் கடந்த நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படக்குழுவினருடன் இருக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அனைத்து அன்பிற்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆடியோ விழாவில், நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். மாநாடு படத்திற்கு வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள், அனைவருக்கும் நன்றி என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |