நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் குருகிராம், பரிதாபாத், அம்பாலா பகுதிகளில் மால், சந்தைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.