மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் கைது செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு, பொது அமைதியை குந்தகம் விளைவிக்கும் வகையில் பிரச்சாரம் செய்ததாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது வரும் 27ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.