தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவி வரும் மின் வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டு வர கடந்த ஆட்சியில் மின் பாதை அமைக்கப்பட்டது.
மின் வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே மின்வெட்டை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.