Categories
மாநில செய்திகள்

JUSTIN :  மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை…  மிகுந்த மனவேதனை அடைந்தேன்… எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!!!

பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் இந்த மாணவி இறந்ததற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண் பிள்ளைகள் மன உறுதியை கையாண்டு பெற்றோரிடம் தன் இன்னல்களை தெரிவிக்க வேண்டும். மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மாண்புமிகு அம்மா ஆட்சியில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1860ம் ஆண்டின் IPC சட்டப்படி, கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டன. அதை பின்பற்றி இச்செயலுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |