Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் கேரளாவில்…. வரதட்சணை கொடுமையால் தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…!!!

வரதட்சனை கொடுமையால் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா  என்ற பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி திருமணமாகி மூன்று மாதங்களான நிலையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்து கொண்ட விசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று ஏன் விசாரிக்கவில்லை என்று கேட்டு விட்டு வீட்டுக்கு சென்று அப்பெண்  தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை புகார் அளித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம் முன்பு திரண்டு காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அவருடன் சேர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர்கள் கலையவில்லை. தொடர்ந்து கேரளாவில் அடுத்தடுத்து ஏழு பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |