இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் வீடுகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளும், நெல் மூட்டைகளையும் பொதுமக்கள் சூறையாடியதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
Categories