நடிகை ஜாக்குலின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள ரூபாய் 200 கோடி பணம் மோசடி வழக்கில் தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது .