கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நாளை ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Categories