Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. தற்போது கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுவரை 5 மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும், 10 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |