கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது அங்கு இரு தரப்பினர் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவது குறித்து எந்த சர்ச்சையும் இல்லை என்று மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் ஹிஜாப் அணிய தடை விதிப்பது தொடர்பான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.