Categories
மாநில செய்திகள்

BREAKING : ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை அவரை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பண மோசடி செய்தாக பதியப்பட்ட வழக்கில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார்; அவரை கண்டுபிடிக்க அவரது உறவினர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை காவல்துறை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையென்றும், எனவே ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என புதிய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |