Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதா…..?  இபிஎஸ் கண்டனம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர் தற்போது பெங்களூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படையினர் பெங்களூருக்கு விரைந்து அவரை கைது செய்வதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதை கடுமையாக கண்டிக்கின்றேன். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களை தொந்தரவு செய்வது முறையல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |