பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி உள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் “இசைக்குயில்” என அழைக்கப்படுகிறார்.
Categories