அம்மா உணவகங்களில் வரும் ஞாயிறு வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் 3400 மாநகராட்சி பணியாளர்களை கொண்டு நாளை முதல் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 100 பழுதடைந்த சாலைகளை கண்டறிந்து சரி செய்ய திட்டமிட்டுள்ளோம். நாளை முதல் அதற்கான பணிகள் தொடங்கும்.
அம்மா உணவகத்தில் வரும் ஞாயிறு வரை இலவச உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இரவு 10 மணிவரை அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.