கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஷேர் பீர் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறையை ஈடுசெய்யும் அடிப்படையில் இந்த மாதம் 26ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவித்துள்ளார்.
Categories