Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN:  விவசாயிகளை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை…!!!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கி பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த உரையில் பிரதமர் மோடி பேசிவருவதாவது:  விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 100-ல் 80 பேர் சிறு விவசாயிகள்.

விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களை நான் கவனித்து வருகிறேன். அரசின் முயற்சியால் விவசாய விளைபொருட்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் சரியான விதைகள், உரம், பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக அந்த உரையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

Categories

Tech |