தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ.25,000, நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமானது.
இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தலா 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.