Categories
உலக செய்திகள்

#JUSTIN: வெளிநாட்டினர் தப்பிச் செல்ல மறுப்பு…. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் தப்பிச்செல்ல அந்நாட்டு அரசு மறுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. எங்களுக்கு எதிராக தெளிவான போர் திட்டங்களை உக்ரைன் வகுத்து வருகிறது. உக்ரைன் உடன் இன்று (மார்ச் 3) கட்டாயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |