Categories
மாநில செய்திகள்

#JUSTIN: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 இன்று நடைபெற்று வருகிறது

இந்நிலையில் கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுகவினர் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர். அன்னாவாசல், உசிலம்பட்டியில் திமுகவினரின் கல்வீச்சு நடைபெற்றுள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளலூரில் மறைமுக தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

Categories

Tech |