Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா…. குடியரசுத்தலைவர் ஒப்புதல்…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட் ட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான  மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க் கட்சிகளுக்கு இடையே வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்து 3 வேளாண் சட்ங்கள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா மக்களவையில்  நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Categories

Tech |