நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலை வீசக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொற்று அதிகரித்து வருவதால் முககவசம் அணிய வேண்டும் என்றும், மாஸ்க் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் மக்கள் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார் மேலும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த நான்கு மாவட்ட நிர்வாகங்களை வழி நடத்தி வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.