இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம்பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம் பெற்றுள்ளார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து விடாமுயற்சியால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வரும் 23-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கான 24 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு வீரராக அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்திக் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.