கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது அங்கு இரு தரப்பினர் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் முன்பு கூடவும், போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று 9 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சிவமொக்கா தாவணகெரேயில் மூன்று தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.