Categories
மாநில செய்திகள்

JUSTIN: 12 நாட்களுக்கு பின்… கடலுக்குச் சென்ற நாகை மீனவர்கள்…!!!

12 நாட்களுக்குப் பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

நேற்று சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் பல்வேறு பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 12 நாட்களுக்கு பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடல் சீற்றம் குறைந்து மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு தரப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

Categories

Tech |