அண்ணா பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் சில சான்றிதளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மாணவர்கள் தங்கள் சான்றிதழில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ் தொலைந்து போனால் மாற்றுச்சான்றிதழ் பெறுவது போன்ற 16 சேவைகளுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதாக தெரிவித்திருந்தது. இது அனைத்து மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் இதனை திரும்பப் பெறக்கோரி பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் எம்இ எம்டெக் படிப்புக்கான கலந்தாய்வுக்கு 18 ஜிஎஸ்டி வரி என்பது கட்டாயம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 3ம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.