Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN: 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!

அந்தமான் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |