தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தற்போது புதிதாக வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.