புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கித் திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நிலவக் கூடும் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருகின்றது. புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.