திமுக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த நாள் முதலே கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வி தரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகின்றது. அதன்படி தற்போது 37 அரசு கல்லூரிக்கு புதிய முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்து உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.