தமிழக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று மருத்துவ பணிகள் கழக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்று குழப்பம் நிலவி வந்தது. இதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் வருகிற 19-ஆம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
இதையடுத்து பள்ளிகள் திறக்கும் போது மாணவர்கள் அனைவருக்கும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என மருத்துவ பணிகள் கழக இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார். இதற்காக 4 கோடி ஜிங்க் மாத்திரை, விட்டமின் மாத்திரைகள் ஓரிரு நாட்களில் கல்வித் துறையிடம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.