சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்த்தப்பட இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்த்தப்பட இருக்கின்றது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு ரூ 10-க்கு பதில் 15 ஆக டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நடைமேடையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.