தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை 37 மாவட்டங்கள் உள்ளன. இதனையடுத்து தமிழகத்தின் 31-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக லலிதா, காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அறிவிப்பால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.