Categories
மாநில செய்திகள்

JustNow: மதியம் 1 மணிவரை பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மதியம் ஒரு மணிவரை பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டும் அரசு, தனியார் பள்ளிகள் செயல்படும். மேலும் 1,3,5,7-ஆம் வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளியும், 2,4,6,8 ஆம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமையும் இயங்கும். ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு இல்லை என்பதால், விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வரலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முக கவசம் அணிவது ஆகியவை முக்கியம். மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

Categories

Tech |