Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையானது 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 21,22,23ஆகிய மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்பது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் ஐந்து சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். குறிப்பாக கோயம்பேடு, தாம்பரம், சானிடோரியம், பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். அதே போல பிற மாவட்ட தலைநகரங்களில் இது போன்ற சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் மட்டுமே 7000 லிருந்து 8000 சிறப்பு பேருந்து என்பது இயக்கப்படும். எந்தெந்த மாவட்டங்களில் இருந்து எந்த எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக தற்போது அமைச்சர் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |