துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், மக்களவை சபாநாயகர்கள் ஓம் பிர்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் குழுமியுள்ளனர்.
இது தவிர முன்னாள் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வும் இந்த விழாவிலே பங்கேற்கிறார். இத்தகைய விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோரின் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஜெகதீப் தன்கர் தற்போது குடியரசுத் தலைவர் இல்லத்தில் உள்ள பதவியேற்பு மண்டபத்தில் வந்து அங்குள்ள முக்கியமானவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார். சற்று நேரத்தில் பதவியேற்பு மண்டபத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜெகதீப் தன்கருக்கு துணை குடியரசு தலைவராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.