Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா…. சூர்யா வரவேற்பு….!!!

சமூக வலைதள பக்கத்தில் இணைந்த நடிகை ஜோதிகாவை அவரது கணவரும், நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த நடிகை ஜோதிகா புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக அவரது கணவரும் பிரபல நடிகருமான சூர்யா, ஜோதிகாவின் ஐடியை தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

Gallery

Categories

Tech |