பிரபல முன்னணி நடிகையான ஜோதிகா விஜய் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் “பீஸ்ட்” படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியில் “பீஸ்ட்” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அனைத்து நடிகைகளும் நடிகர் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் முன்னணி நடிகையான ஜோதிகா நடிகர் விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துவிட்டார். அட்லி இயக்கத்தில் வெளியான “மெர்சல்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் அந்த திரைப்படத்தில் முதலில் நடிகை ஜோதிகா தான் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால் ஸ்கிரிப்ட் குறித்த கருத்து வேறுபாடு காரணமாக ஜோதிகா இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார். ஜோதிகா மற்றும் விஜய் இருவரும் நடித்த குஷி படம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு ஜோதிகா, விஜய் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இருவரையும் திரையில் பார்க்கலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமடைந்துள்ளனர்.