ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் அதிகமானோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்
பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியா நீக்கம் என அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் தன்னை அதிகாரபூர்வக இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க : இவ்வளவு பாஸ்ட்டா ? பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா……!!