Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடியை சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா ….. ம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது …!!

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது.

இந்த மாதத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்படும் என்று சிந்தியா எதிர்பார்த்த நிலையில் திக்விஜய் சிங்கிற்கு தான் மாநிலங்கவை பதவி கிடைக்கும் என்றும் சொல்லப்பட்ட நிலையில் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இத்தகைய சூழ்நிலையில் அவர்  காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தொடர்பில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள மறுக்கிறார்.

மேலும் தனக்கு ஆதரவுடன் இருக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமறைவாகினர். இதனிடையே தான் அவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். உடன் அமித்ஷாவும் இருப்பதால் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பது உறுதி ஆகியுள்ளது. இதில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தை நடக்க முழு வாய்ப்பு இருப்பதால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |