அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்திய வழக்கில் கைதான கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததை தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது இரு தரப்பில் வாதம் நடைபெற்று பின்னர் கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளை ஒத்திவைத்தார் நீதிபதி சக்திவேல்.