உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காளான் உணவை எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் குறையும். ஏனெனில் காளான் கொழுப்பைக் கரைத்து நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும் ஒரு உணவு. இதுதவிர எடை குறைக்க விரும்புவோருக்கு காளான் மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமல்லாமல் லினோலிக் அமிலம் காளானில் இருப்பதால் இது புற்றுநோயை தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.