நெதர்லாந்தின் பிரதமர் கடைக்கு காய்கறி வாங்க போகும் காணொளி காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நெதர்லாந்து நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுமட்டுமின்றி இவர் பகுதிநேர வேலையாக யூடியூப் பக்கத்தில் அன்றாட செயல்களை காணொளியாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் கணேஷ் ஒரு கடையை காணொளி எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராதவிதமாக அந்நாட்டு பிரதமரான மார்க் ரூட்டேவை சந்தித்துள்ளார். குறிப்பாக மார்க் மிகவும் சாதாரண மற்றும் எளிமையான தோற்றத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தனி ஒருவராக நடந்து சென்றுள்ளார்.
பாதுகாப்புக்கு ஒருவர் கூட இல்லாமல் எளிமையாக சூப்பர் மார்கெட்டில் பொருட்களை வாங்கி அதைத் தானே சுமந்து வரும்
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே அவர்கள்…
# நெதர்லாந்து நாட்டில் வேலை செய்யும் தமிழர் கணேஷ் pic.twitter.com/sBCJCO81wk— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 9, 2021
மேலும் கணேஷ் சாதாரண மனிதர்களை பேட்டி காண்பது போன்று மார்க்கிடம் எடுத்துள்ளார். அதிலும் முதலில் பேச தயங்கிய மார்க் அதன் பிறகு நன்றாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “நான் நாட்டின் பிரதமராக இருந்தாலும் அவசரமாக காய்கறி வாங்க கடைக்கு போகிறேன்” புன்முறுவலுடன் கூறியுள்ளார். இதனையடுத்து கணேஷ் தன்னை ஒரு இந்தியர் என்று மார்க்கிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு மார்க், எனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும் என்றும் கூறிவிட்டு சில நிமிடங்களில் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த காணொளி காட்சியானது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகின்றது.