வீட்டு கதவின் ரகசிய எண்ணை போட்டு உள்ளே நுழையும் பூனையை இல்லத்தின் உரிமையாளர் சட்டப்படி தத்தெடுத்துள்ளார்.
தென்கொரியாவில் சாலையில் சுற்றித்திரியும் பூனை உணவு கிடைக்காத சமயத்தில் அங்குள்ள வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு ரகசிய எண்கள் கொண்ட டோர் லாக் கருவியை கதவில் பொருத்தியுள்ளார். இருப்பினும் இந்த பூனை வீட்டின் உரிமையாளர் கதவில் போட்டு வைத்திருக்கும் டோர் லாக்கின் ரகசிய எண்களை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறது.
இதனையடுத்து அந்த பூனை தனது காலால் டோர் லாக்கின் ரகசிய எண்களை அழுத்தி தினந்தோறும் 20 முறையாவது அந்த வீட்டிற்கு சென்று தனக்குத் தேவையான உணவை சாப்பிட்டுவிட்டு வெளியேறுகிறது. இந்த வீடியோவை வீட்டின் உரிமையாளர் இணையதளத்தில் பதிவிட்டதால் அது வைரலாகி வருகிறது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் கூறியதாவது, டோர் லாக்கின் ரகசிய எண்களை பூனை அழுத்துவதை தடுப்பதற்காக அதன்மீது லேமினேஷன் அட்டையை பொருத்தினேன்.
ஆனால் அதனையும் அந்த பூனை தன்னுடைய நகங்களால் கிழித்து விட்டது. இதையடுத்து முதலில் அந்த பூனையின் செயலால் எரிச்சலடைந்தோம். ஆனால் இந்த பூனையின் புத்திசாலித்தனத்தை கண்டு வியப்படைந்து, அதனை சட்டப்படி தத்தெடுத்துள்ளோம். மேலும் அந்தப் பூனைக்கு “டவே பர்ன்” என்ற பெயரையும் சூட்டியுள்ளோம் என்றுள்ளார்.