Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிறுத்த முயற்சி செய்தும் முடியல… பலியான வாயில்லா ஜீவன்… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

ரயிலில் அடிபட்டு காளைமாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது கீரனூர் ரயில் நிறுத்தத்தில் ஒரு காளை மாடு தண்டவாளத்தில் புகுந்து விட்டது. அந்த நேரத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் கீரனூர் பகுதியை நோக்கி வருகிறது. இதனை அடுத்த மாடு நிற்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றார்.

ஆனால் ரயில் வேகமாக சென்றதால் உடனடியாக ரயிலை நிறுத்த முடியவில்லை. பின்னர் துரதிஷ்டவசமாக அந்த காளை மாடு ரயிலில் அடிபட்டு கீரனூர் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று காளை மாட்டின் உடலை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |