ஜப்பான் நாட்டில் காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் ஷிமோகிடா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இன்று உள்ளூர் நேரமான காலை 6 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 70 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.