சீனாவில் தற்போது நிலவி வரும் மிகவும் வெப்பமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது.
சீனாவில் நடப்பாண்டில் சென்ற ஆண்டைவிட 14% குறைவாகவே மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து சீன நாட்டில் மிகவும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.
இவ்வாறு சீனாவில் நிலவி வரும் மிகவும் மோசமான காலநிலையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி 15 லட்சத்துக்கு மேலான பொதுமக்கள் அந்நாட்டில் நிலவும் வெப்பமான சூழ்நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.