Categories
உலக செய்திகள்

‘பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும்’…. காலநிலை மாற்ற மாநாட்டில்…. பிரதமர் மோடி உரை….!!

காலநிலை மாற்றம் குறித்து பள்ளிகளில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று மாநாட்டில் பிரதமர் கூறியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை cop26 காலநிலை மாற்ற உச்சி மாநாடானது ஐ.நா சபையின் சார்பாக நடத்தப்படுகிறது. அதிலும் உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி என மொத்தம் 120 நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்த மாநாட்டில் பாரீஸ் உடன்படிக்கையின் விதிகள் உறுதி செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றியனார்.  அதில் அவர் கூறியதில் “காலநிலை மாற்றம் குறித்து பள்ளிகளில் பாடமாக கற்பிக்க வேண்டும். நமது வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்களில் முக்கியமாக காலநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்தியாவில் தூய்மை இந்தியா, குடிநீர் இணைப்பு போன்ற திட்டங்கள் நல்ல பலனை மட்டுமின்றி குடிமக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தியுள்ளது. இது குறித்து வருங்கால சந்ததியினர்  தெரிந்து கொள்வதற்காக பள்ளி பாடத்திட்டங்களில் சேர்ப்பது மிகவும் அவசியம். அதிலும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் வேளாண்மைத்துறை மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார்

Categories

Tech |