Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரியாக வரவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

குடிநீரை விநியோகம் செய்ய வேண்டி பொதுமக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் 5௦-க்கும் அதிகமானோர் காலி குடங்களுடன் புத்து கோவில் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இது பற்றி பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டால் தான் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவார்கள் என காவல்துறையினரிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சமாதானம் ஆகாத பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் இங்கு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் டிராக்டர் டேங்கர் மூலமாக உங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும், பின் ஆள்துளை கிணறு சரிபார்க்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுயுள்ளனர்.

Categories

Tech |