Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உரிய நடவடிக்கை இல்லை…. காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  இந்த பகுதியில் சில ஆண்டுகளாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பொதுமக்கள் குடிதண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையறிந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அதிகாரிகள் சரிவர குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் பெண்களிடம் என உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Categories

Tech |